கேரளா மற்றும் தமிழ்நாட்டின் காடுகளில் பல நாட்கள் நடைபெற்ற ஆய்வில் ஏழு வகை இரவுத் தவளைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் 4 வகை தவளைகள் உலகிலேயே மிகவும் சிறிய தவளைகள் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற மூன்று வகை தவளைகளும் 18MM க்கும் குறைவானதாக, மிகவும் சிறிய தோற்றம் கொண்டவையாகும் என கூறப்படுகிறது.
டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த சோனாலி கார்க் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகையில், "இம்மாதிரியான சிறிய தவளைகளை காண்பது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது; இவை கட்டை விரலின் நகத்தில் இருக்ககூடிய அளவில் உள்ளது; இவை பூச்சிகளைப் போன்ற ஒலியை எழுப்புவதால், இத்தனை காலமும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம்" என தெரிவித்தார்.