படிப்பு, வேலை, சம்பளம், திருமணம், குழந்தை, வங்கி சேமிப்பு இவற்றிலேயே நம் வாழ்க்கை மொத்தமும் மூழ்கி விடுகின்றது. இந்த வரிசையில் ஏதாவது ஒன்றில் திருப்தி அடைய முடியா விட்டாலும், மனதளவில் பாதிப்புகள் ஏற்பட்டு விட்டதாக இந்த காலத்து இளைஞர்கள் நினைக்கின்றார்களாம். சமீபத்தில் நடந்த ஆய்வின் அடிப்படையில் 18 - 33 வயதுள்ளவர்கள் தான் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாவதாக உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் அவர்கள் தூக்கமின்மை, குறைவான நோய் எதிர்ப்பு சக்தி, உயர் இரத்த அழுத்தம் போன்றவைகளால் கஷ்டப்படுவதாகவும் கூறுகின்றனர்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.