பெற்றோர்களின் சண்டையில் 'டேமேஜ்' ஆகும் குழந்தைகள்..!!!

  jerome   | Last Modified : 23 Feb, 2017 08:33 pm
பிரச்சினை இல்லாத வீடுகளே இல்லை. குடும்பம் என்று இருந்தால் பிரச்சினைகள், வாக்குவாதங்கள் வருவது இயல்பு தான் என்ற தவறான எண்ணத்திற்கு நம் சமூகம் பழக்கப்பட்டு விட்டது. ஆனால், இந்த போக்கு மிகவும் தவறானது என்றும், இதனால் குழந்தைகள் அதிக பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பிரச்சினைகள் உள்ள வீட்டில் வளரும் குழந்தைகளின் மன நிலை, போரில் உள்ள ராணுவ வீரர்களின் மனநிலையை போன்று காணப்படுகின்றதாம். இதனால், அவர்களின் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றி, எதிர்காலத்தில் தவறான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். magnetic resonance imaging முறையில் குழந்தைகளின் மூளைப் பகுதியை ஆய்வு செய்ததில், பெற்றோர்களின் சண்டையின் போது பேசும் பேச்சுக்களும், நடவடிக்கைகளும் மூளையின் anterior insula மற்றும் amygdala பகுதியில் பதிவாகி விடுகின்றதாம். இதனால், பின்னாளில் அவர்களை அறியாமலேயே குரூர எண்ணங்களை உடையவர்களாக மாறுகின்றனராம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close