நமக்கு பிடித்தவர்கள் இறந்தாலும் கூடவே தான் இருப்பாங்க...!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மனித வாழ்க்கையில் உறவுகள் என்பது ஒரு தொடர்கதையாகத் தான் இருக்கின்றது. ஒன்று பிரிந்தாலும் மற்றொன்று இணைந்து கொள்ளும். ஆனால், மரணம் என்ற ஒரு சம்பவம் மட்டுமே அனைத்தையும் வாரிக்கொண்டு சென்று விடுகின்றது. அப்படிப்பட்ட மரணத்தால் கூட இறந்தவர்களின் நினைவுகளை நம்மிடம் இருந்து பிரிக்க முடியாது. ஒரு மனிதன் இந்த மண்ணில் வாழ்ந்ததற்கான சுவடுகள், அவர்கள் நம்மில் உண்டாக்கி செல்லும் நினைவுகள் மட்டுமே. அந்த நினைவுகளை நாம் என்றுமே மறக்காமல் இருக்க சுவிட்ஸர்லாண்டைச் சேர்ந்த Algordanz என்ற நிறுவனம் புது யுத்தியை கையாண்டு வருகின்றது. அதாவது, நமக்கு பிடித்தமானவர்களின் இறந்த உடலை எரிக்கும் போது கிடைக்கும் சாம்பலில் இருந்து வைரத்தை தயார் செய்து, அதை நகைகளாக அணிந்து கொள்ள ஏற்பாடு செய்கின்றது. சாம்பலை எடுத்து அதிலுள்ள கார்பனை தனியாக பிரிக்கின்றது. பிறகு அதை கிராஃபைட்டாக மாற்றி 1500 டிகிரி செல்சிஸ் வெப்பநிலையில் பல வாரங்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்து வைரமாக மாற்றி தருகின்றது. "Ashes to Diamond, a Jewel To Remember" என்ற வாசகத்தை தான் Algordanz நிறுவனம் செயல் படுத்துகின்றது. இதுவரை 850 பேர் இந்த வைரங்களை வாங்கி உள்ளனர். இதில், 25% பேர் ஜப்பானியர்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close