'ப்ராக்டிகல்' வகுப்புடன் கூடிய பாலியல் கல்விக்கூடம் - வியன்னா

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகம் முழுவதும் பாலியல் தொடர்பான கொலைகள் நடந்து கொண்டிருக்கும் இன்றைய நிலையில், அதைப்பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கைகள் விடுத்த வண்ணம் உள்ளனர். இதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த முயற்சிகளும் எடுத்து வருகின்றனர். ஆனால், 2011 ஆம் ஆண்டிலேயே வியன்னாவில், மரியா தாம்சன் என்ற பெண், பாலியல் கல்விக்கென தனி பள்ளிக்கூடத்தை உருவாக்கியுள்ளார். இதில் 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி. ஒரு பருவ படிப்பிற்கு ரூ. 1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப் படுகின்றது. இதில் முக்கிய அம்சம் இவர்களின் பாடத்திட்டத்தில் செய்முறை வகுப்புகளும், வீட்டுப்பாடங்களும் இருக்கின்றது. மனித உடற்கூறு, ஆரோக்கியமான உடலுறவு போன்றவையும் சொல்லித் தரப்படுகிறது என மரியா கூறியுள்ளார். மரியாவின் இந்த முயற்சிக்கு அந்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பியதும் குறிப்பிடத்தக்க ஒன்று. உலகிலேயே இது தான் முதல் பாலியல் கல்விக்கான பள்ளிக்கூடம் என்பது கூடுதல் சிறப்பு.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close