காலையில் அலாரத்தை ஆஃப் பண்ணிட்டு தூங்குபவரா நீங்க..?

  jerome   | Last Modified : 28 Feb, 2017 09:58 pm

இன்னைக்கு இருக்க அவசர உலகத்துல, தூங்குறதுக்கு நேரம் இல்லாம கஷ்டப்பட்டுட்டு இருக்கோம். இதுல, சில பேருக்கு நேரம் கிடைச்சாலும், தூக்கம் வராம தவிக்கிறாங்க. இவ்ளோ இடைஞ்சல்களுக்கு மத்தியிலும், காலையில அலாரத்தை ஆஃப் பண்ணிட்டு தூங்குற குட்டித்தூக்கத்தில் தான் சுகமே இருக்கு. ஆனால், அந்த சுகத்தை அனுபவிக்கும் சுகவாசிகள் எல்லாரும், மனநோயாளிகள்னு உளவியல் நிபுணர்கள் சொல்லிட்டாங்க.. கவலையினால் ஏற்படும் மனஅழுத்தத்தின் வெளிப்பாடு தான் இந்த பழக்கம். Clinomania அல்லது Dysania என்று சொல்லப்படும் இந்த பிரச்சினை உலகில் பெரும்பாலோனோரிடம் உள்ளதாம். Greek மொழியில் clino என்றால் bed, mania என்றால் addiction. Dysania - வால் பாதிக்கப்பட்டவர்கள், அன்றாட வாழ்வில் நிகழும் சிறு, சிறு பிரச்சினைகளைக் கூட எதிர்கொள்வதற்கு தயங்குவார்களாம். இந்த பழக்கத்தை தொடர்ந்தால் எதிர்காலத்தில், மன ரீதியிலான சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.