சூரியனை ஆராய அடுத்த ஆண்டு விண்கலம் அனுப்புகிறது நாசா

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பூமியில் இருந்து சுமார் 1,490 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக நீண்ட காலமாக விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். சூரியனை நோக்கி பயணிக்கும் போது, பல லட்சம் கி.மீ தூரத்திலேயே சூரியனின் வெப்பம் காரணமாக விண்கலங்கள் பொசுங்கி விடும் என்பதால், எவ்வாறான விண்கலங்களை சூரியனுக்கு அனுப்பலாம் என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிர யோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இந்த முயற்சியில் தற்போது வெற்றி கண்டுள்ள விஞ்ஞானிகள், சூரியனை ஆராய்வதற்காக முதல்முறையாக ரோபோடிக் விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளனர். சூரியனை நோக்கி பயணிக்கவுள்ள அந்த விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள் பிரத்யேகமாக உருவாக்கியுள்ளனர். சூரியனின் வெப்பத்தைத் தாங்கும் அளவுக்கு விண்கலத்தைச் சுற்றி 11.4 செ.மீ அளவு கொண்ட கார்பன் பொருள் அடங்கிய கவசத்தைப் பொருத்தியுள்ளனர். விண்கலத் துக்கு வெளியே பாயும் 1,370 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை இந்த கவசம் தாங்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த விண்கலமானது சூரியனின் மேற்பரப்பில் இறங்காது எனவும், சூரியனில் இருந்து பல கி.மீ தூரத்தில் நிலை நிறுத்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த விண்கலத்தின் மூலம், சூரியனின் மேற்பரப்பை விட, அதன் வளிமண்டலம் தான் மிகுந்த வெப்பம் கொண்டதாக இருக்கிறது. அது ஏன்? அடுத்ததாக ஒரு மணி நேரத்துக்கு இடைவிடாமல் அனைத்து திசைகளிலும் சூரியனில் உள்ள துகள்கள் ஒளிர்ந்து சுற்றுகின்றன. அது எப்படி நிகழ்கிறது? சூரியனின் மேற்பரப்பு போட்டோஸ்பியர் என்று ஏன் அழைக்கப்படுகிறது? இவ்வாறான மிக முக்கியமான 3 கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close