எப்போ.. என்ன நடக்கும்னு தெரியாமத்தான் நாம இந்த வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கோம். ஆனால், மரணம் மட்டும் உறுதியா எல்லாருக்கும் நடக்கும். அத எவ்ளோ பெரிய 'அப்பா டக்கர்' வந்தாலும் மாத்தவே முடியாது. அந்த மரணம் நிகழும் தருணத்தில் 7 நிமிடங்களுக்கு, நாம் வாழ்ந்த வாழ்வில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் மனக்கண்ணில் தோன்றி மறையுமாம். இதுகுறித்து, மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர்.
இவர்களின் ஆராய்ச்சி, அறிவியல் மற்றும் மனோதத்துவம் என இரண்டு முறைகளில் நடந்துள்ளது. Near Death Experience என்று சொல்லக்கூடிய சாவிற்கு அருகே சென்றவர்களிடம் கேட்டபொழுது, சிலர் அதை ஆன்மீக ரீதியில் உணர்ந்ததாக சொல்வதாகவும், சிலரோ வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான தருணங்கள் நினைவிற்கு வந்ததாகவும் கூறியுள்ளனர்.
ஆனால் அறிவியல் படி, மூளையில் நினைவுகளை சேமிக்கும் 'ஹிப்போகேம்பஸ்' பகுதியில் உள்ள மகிழ்ச்சியாக உணரவைக்கும் எண்டோர்பின்கள் மற்றும் அமைதியை உணரவைக்கும் 'அமிக்டலா' வில் இருந்து மன அழுத்தத்தை குறைக்க உதவும் நோரட்ரினலின் ஹார்மோன்கள் போன்றவை இறக்கும்போது சுரக்குமாம். மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் தடைபடுவதால் இது நடப்பதாகவும் அதனாலேயே உயிர்பிரியும் நேரத்தில் மகிழ்ச்சியாக உணரமுடிகிறது எனவும் கூறுகின்றனர்.
அறிவியலோ..? ஆன்மீகமோ..? எது உண்மைன்னு, சாகும்போது கண்டிப்பா நமக்கே தெரிஞ்சுரும்...