சர்வதேச விண்வெளி ஓடத்தில் மரம் வளர்க்க நாசா திட்டம்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நீண்ட காலம் சர்வதேச விண்வெளி ஓடத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை அங்கேயே உற்பத்தி செய்யும் திட்டத்தை தொடங்கவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தன்னிறைவு பெறப்பட்ட தாவர வளர்ச்சி அமைப்பு ஒன்றை சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு அனுப்பி வைக்க நாசா திட்டமிட்டுள்ளது. அத்துடன், அங்கு நடத்தப்படவுள்ள பையோசையன்ஸ் ஆராய்ச்சி மூலம், விண்வெளியில் தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ள மேற்படி தாவர வளர்ச்சி அமைப்பின் ஒரு பகுதி ஏற்கனவே புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், வரும் மார்ச் 19ஆம் தேதி இது சர்வதேச விண்வெளி ஓடத்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. பூமியில் ஒரு செடி வளரும் போது, அதற்கு எவ்வளவு சூரிய ஒளி , மற்றும் தண்ணீர் தேவை என்பதை அடிப்படையாக வைத்து, சர்வதேச விண்வெளி ஓடத்தில் செயற்கையான முறையில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், 180 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சென்சார்கள் மூலமே விண்வெளியில் வளரும் தாவரத்தின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படவுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close