கழிப்பறையை விட மொபைலில் தான் பாக்டீரியாக்கள் அதிகமாம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
புனேவில் உள்ள தேசிய செல் அறிவியல் மையத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், 27 மொபைல் போன் ஸ்க்ரீன்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவற்றில் இருந்து 518 வகையான பாக்டீரியாக்கள் மற்றும் 28 பூஞ்சை வகைகளை கண்டு பிடித்துள்ளனர். டாய்லெட் சீட்டில் இருப்பதை விட அதிக அளவில் இருக்கும் இந்த பாக்டீரியாக்களில் பெரும்பாலானவை மனிதர்களுக்கு நன்மை பயக்க கூடியவையே. இவற்றில் 2 புதிய பாக்டீரியாக்கள் மற்றும் ஒரு புதிய பூஞ்சையையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அவற்றிக்கு முறையே Lysinbacillus telephonicus, Microbacterium telephonicum மற்றும் Pyrenochaeta telephoni என பெயர் வைத்துள்ளனர். மொபைல் போன்களை ஆப் செய்து விட்டு சோப்பு நீரில் நனைத்த துணியினை கொண்டு துடைப்பதன் மூலம் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் இன்றி மொபைல் போன்களை தூய்மையாக வைத்துக் கொள்ளலாம், என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close