மனிதர்களின் உடல் எப்பவுமே புதிரானது தான். அதில் ஒரு புதிருக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. நம் உடலின் உயரம் மாலையில் விட காலையில் 1 செ.மீ அதிகமாக இருக்குமாம். இதற்கு பகல் முழுவதும் நாம் ஈடுபடும் வேலையினால் முழங்கால்கள் மற்றும் தண்டுவடத்தில் ஏற்படும் அழுத்தமே காரணம் என்று சொல்லப்படுகின்றது. நாம் நடக்கும்போது தண்டுவடத்தில் உள்ள 33 முதுகெலும்புகளில் அழுத்தம் ஏற்பட்டு நம் உடல் உயரத்தை குறைக்கின்றதாம். இரவில் தூங்கும் போது எலும்புகள் தளர்ச்சி அடைவதால் அழுத்தம் குறைந்து தங்களின் இயல்பு நிலைக்கு திரும்புவதால் உயரம் 1 செ.மீ வரை அதிகரிக்கின்றதாம்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.