"பொய் சொல்லலாகாது பாப்பா" ன்னு பாரதியார் பாடி வச்சுட்டு போனாரு. ஆனா, இப்போ பொய் பேசுற குழந்தைங்க தான் புத்திசாலிகள்னு குழந்தைகள் நல மருத்துவர்கள் சொல்றாங்க. இதுபற்றி ஆய்வு செய்த டோரன்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சி மருத்துவர் காங் லீ, "சிறுவயதில் குழந்தைகள் பொய் பேசுவதால் அவர்களின் கற்பனைத் திறன் அதிகமாகின்றது. இதனால், மூளையின் செயல்பாடு அதிகரிப்பதால், பிற்காலத்தில் அறிவு நிறைந்தவர்களாக வளர்கின்றனர். ஆனால், பெற்றோர்கள் பொய் பேசுவதை ஒரு கெட்டபழக்கமாகக் கருதி குழந்தைகளை கண்டிக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.