கருவில் இருக்கும் குழந்தைக்கும், தாய்க்கும் இணைப்பு பாலமாக இருப்பது தொப்புள் கொடி தான். இந்த தொப்புள் கொடியில் உள்ள ஸ்டெம் செல்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு உதவுவது மட்டுமின்றி, தாய்மாரின் உடல்நலத்திற்கும் உறுதுணையாக இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. பெண்களின் கர்ப்பகாலத்தில் அவர்கள் உடல் உறுப்புக்களில் உள்ள திசுக்களில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டால், ஸ்டெம் செல்கள் அதனை சீர் செய்து விடுகின்றதாம். குறிப்பாக இதயத்தில் உள்ள கார்டியாக் செல்கள் மற்றும் எலும்பு செல்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்க உதவி செய்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.