காதல் ஒண்ணும் கடவுள் இல்லடா...!!

  jerome   | Last Modified : 10 Mar, 2017 05:38 pm

கொக்கைன் தரக்கூடிய போதயைத் தான், காதலிக்கும் போது ஆண், பெண் இருபாலரும் உணர்கின்றனர் என்று அறிவியல் பூர்வமாக கண்டறிந்து உள்ளனர். நமது மூளையில் அமிக்டாலா என்ற சிறிய பகுதிதான் நமது உணர்ச்சிகளுக்கான ஹார்மோன்களை சுரக்கின்றது. அதிலும் அதிக சந்தோஷத்தையும், பரவசத்தையும் உருவாக்கக்கூடிய டோபோமைன், செரடோனின் ஹார்மோன்கள் போதைப் பொருட்கள் சாப்பிட்டால் அதிகம் சுரக்கின்றன. இதேபோல், எதிர் பாலினத்தின் மேல் ஈர்ப்பு கொள்ளும்போதும் இவை அதிகம் சுரந்து காதலை சுவையாக்குகின்றன. அதோடு அட்ரினல் சுரப்பிகள் உருவாக்கும் அட்ரினலின் ஹார்மோன், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து இதயத்துடிப்பை வேகமாக துடிக்க வைக்கின்றதாம். போதையில் எடுக்கும் தவறான முடிவுகளுக்கும், காதல் தோல்வியால் தோன்றும் எதிர்மறையான எண்ணங்களுக்கும் இந்த ஹார்மோன்களே காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ("காதல் ஒண்ணும் கடவுள் இல்லடா, இந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகந்தானடா" ன்னு உலகநாயகன் கரெக்ட்டாதான் பாடியிருக்காரு)

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close