வடகிழக்கு சைபீரியாவில் உள்ள 'டுண்ட்ரா' என்ற பனி படர்ந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 'பெர்மாஃப்ராஸ்ட்' என்ற 32,000 வயதை உடைய மலர் சமீபத்தில் மலர்ந்துள்ளது. டுண்ட்ரா பகுதியில் ஐஸ் ஏஜ் காலத்து புதை படிமங்களை தேடும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஐஸ் ஏஜ் காலத்தில் வாழ்ந்த அணில்களால் சேமித்து வைக்கப்பட்டு இருந்த 70 விதைகள் படிமங்களாக கிடைத்தன.
அவற்றில் ஒன்றான பெர்மாஃப்ராஸ்ட் தான் தற்போது மலர்ந்துள்ளது. இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள், "இந்த அரிய நிகழ்விற்கு அணில்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டுமென்றும், பெர்மாஃப்ராஸ்ட் தவிர்த்து மற்ற விதைகளும் வளரவேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக" கூறி உள்ளனர்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.