புவியின் வெப்பநிலை கூடிக்கொண்டே இருப்பது குறித்துக் கவலை கொண்ட உலக நாடுகள் அனைத்தும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், தற்போது 10% அளவிற்கு பெருங்கடல் பகுதிகள் அமிலத்தன்மை அடைந்துள்ளதாகவும், 2050-ல் 89% வரை அவை உயரக்கூடும் என்றும் கடல் சார் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், கடல் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், கடல் வாழ் உயிரினங்கள் முற்றிலும் அழியக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர். இந்த இக்கட்டான நிலையை "பாரீஸ் உடன்படிக்கை" யில் உலக நாடுகள் விவாதிக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.