மத்திய இந்தியாவில் உள்ள சித்ரகூட் எனும் பகுதியில் பூமிக்கு அடியில் புதையுண்டிருந்த 160 ஆண்டுகள் பழமையான தாவர படிமங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதுவரை கண்டு பிடிக்கப்பட்ட தாவர படிமங்களிலேயே 120 கோடி ஆண்டுகள் முந்தைய பச்சை நிற ஆல்கைகளே மிகவும் பழமையானதாக கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் 160 கோடி ஆண்டுகள் பழமையான சிகப்பு நிற ஆல்கைகள் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவற்றின் உட்கூறு அமைப்பு சிதைவடையாமல் இருப்பதால் இவற்றின் மூலம் உயிரின தோற்றம் குறித்த முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.