மொபைல் தொலையுறதும்; தீவிரவாத தாக்குதலும் ஒண்ணு தான்!!

  jerome   | Last Modified : 16 Mar, 2017 09:03 pm

நம்ம சின்ன வயசுல பாட்டிகிட்ட கேட்ட கதையில ஒரு அரக்கனோட உயிர், ஏழு மலை ஏழு கடல் தாண்டி கூண்டுல இருக்க கிளிக்கிட்ட இருக்கும். அந்த கிளியை சாகடிச்சா போதும், அரக்கனும் செத்துருவான். அந்தக் கதை, இப்போ கிட்டத்தட்ட உண்மையாகப் போகுது. ஏன்னா, இப்போ இருக்கிற இளைய தலைமுறையினரின் உயிர் அவங்க கையில இருக்கும் மொபைல்ல தான் இருக்குது. அப்படிபட்ட மொபைல் தொலைந்து விட்டால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்..? லண்டனைச் சேர்ந்த உளவியல் மருத்துவர்கள் இது குறித்து நடத்திய ஆய்வில் 2000 பேர் பரிசோதிக்கப் பட்டுள்ளனர். அதில், அவர்களின் மன அழுத்தம் மிக அதிகமாக இருந்துள்ளது. உங்களுக்கு தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்தால் எந்த அளவிற்கு நீங்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாவீர்களோ அதேபோல் தான் மொபைல் தொலைந்தாலும் இருக்கும் என்று கூறியுள்ளனர். சிலர், உறவினர்கள் இறந்ததைப் போல உணர்கின்றனராம். ஆண்களை விட பெண்கள் தான் அதிகமான மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனராம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close