மனிதர்களை 'குள்ளர்'களாக மாற்றும் புவியின் வெப்பம்!!

  jerome   | Last Modified : 17 Mar, 2017 03:28 pm

ஒவ்வொரு நூற்றாண்டிலும் பூமியின் வெப்பநிலை உயர்ந்துகொண்டே இருக்கின்றது. மனிதர்களின் அன்றாட பயன்பாட்டினால் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவும் கூடிக்கொண்டே தான் போகின்றது. இதன் விளைவுகள் பல வகைகளில் நமக்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றாய், புவி வெப்ப அதிகரிப்பால் பாலூட்டி உயிர்களின் உருவ அளவு குறைந்து வருவதாக ஐரோப்பிய விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். சுமார் 5.37 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிர்களின் படிமங்களை, இன்றைய உயிர்களின் உருவ அமைப்புகளோடு ஒப்பிட்டு பார்த்ததில் இது தெரிய வந்துள்ளது. புவி வெப்பத்தால் தாவரங்களில் ஊட்டச்சத்துக்கள் குறைவதால், அதனை உண்ணும் உயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close