3 மாதங்களில் 20 லட்சம் பேரை பாதித்துள்ள மலேரியா

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கிழக்கு ஆப்பிரிக்க நாடான புருண்டியில் நாள் ஒன்றுக்கு 10 பேர் மலேரியா நோய் பாதிப்பில் இறப்பதாக அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டில் மற்றும் 3000 பேர் இந்நோய் தாக்கத்தால் இறந்துள்ளனர். இந்த ஆண்டின் துவக்க மாதங்களிலேயே 20 லட்சம் பேர் மலேரியாவால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த ஆண்டில் மலேரியாவின் பாதிப்பு 17% அதிகரித்து உள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். உலக சுகாதார நிறுவனம் புருண்டியின் இந்நிலைமையை நெருக்கடி நிலையாக அறிவித்துள்ளது. புருண்டியில் போதுமான அளவு மலேரியா தடுப்பு மருந்துகள் இல்லையென்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசு உலக நாடுகளிடம் நிதி மற்றும் மருத்துவ உதவிகளைக் கேட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close