விண்வெளி பயணத்தால் பாதிக்கப்படும் இரத்த அணுக்கள்

  jerome   | Last Modified : 17 Mar, 2017 06:14 pm
பூமியை தவிர வேறு கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா?, மனிதர்களால் மற்ற கிரகங்களில் வாழ முடியுமா? என்பது போன்ற ஆராய்ச்சிகளில் விண்வெளி விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். பூமிக்கு அருகில் உள்ள நிலவு, செவ்வாயை தொடர்ந்து பல ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் வரை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதற்கு சவாலாக புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. விண்வெளியில் பயணித்து வந்துள்ள வீரர்கள் அனைவருக்கும் 'லூகேமியா' எனும் இரத்த அணுக்கள் பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை சராசரியை விட அதிகமாக இருப்பதே லூகேமியா. மேலும், நமது இரத்தத்தில் சிறிதளவு ஸ்டெம் செல்களும் இருக்கின்றதாம். இவற்றின் உதவியால் தான் ஆக்சிஜன் கடத்தல், நோய் எதிர்ப்பு சக்திக்கான இரத்தத்தின் இயக்கங்கள் நடைபெறுகின்றது. விண்வெளியில் உள்ள காஸ்மிக் கதிர்கள் மற்றும் காந்த அலைகளால் இந்த ஸ்டெம் செல்களில் பாதிப்பு ஏற்படுகின்றதாம். ஆகவே, மற்ற கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கு புற சூழலில் சாத்தியம் இருந்தாலும், நம் உடலமைப்பு அதற்கு ஏற்றதாக அமையுமா என விஞ்ஞானிகள் யோசிக்கத் தொடங்கி உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close