ஓவர் ஃபீலிங்ஸ் உடலுக்கு ஒத்து வராது பாஸ்...!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பிறருடைய கஷ்டங்கள், கோபங்களை நினைத்து அவர்களுக்காக இரக்கப்படும் போது, நம்முடைய மன அழுத்தம் அதிகளவில் அதிகரிக்கும் என்று வாஷிங்டன் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்கள் கூறுகின்றனர். சுமார் 400 கல்லூரி மாணவர்களிடம் நடத்திய ஆய்வில், மற்றவர்களுடைய கஷ்டங்களை அவர்கள் கேட்டபின் மாணவர்களின் எச்சில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. எச்சிலில் மன அழுத்தம் ஏற்படும் போது சுரக்கின்ற கார்டிசோல் ஹார்மோனின் அளவு மிக அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பேராசிரியர்கள் "மற்றவர்களின் மனநிலை எப்போது வேண்டுமானாலும் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களிடம் பேசிய சில நிமிடங்கள் கவலையாக இருந்துவிட்டு, பிறகு அவர்கள் சகஜ நிலைக்கு திரும்பி விடுவர். ஆனால், நீங்கள் அவர்களைப் பற்றி சிந்தித்து உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்க நேருகின்றது" என்ற தங்களின் கருத்துக்களை கூறியுள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close