சமீபத்தில் நாசாவின் செயற்கைக்கோள் மூலம் புவியின் மேற்பரப்பை ஆராய்ந்ததில் அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா மற்றும் இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களில் அம்மோனியா வாயுவின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்து வருகின்றதாம். நிலங்களில் இருந்து வெளிவரும் இந்த வாயு, வளிமண்டலத்தில் உள்ள கந்தகம் மற்றும் நைட்ரஜனுடன் கலந்து அமில மழையை உண்டாக்கும் தன்மை கொண்டது. மேலும், அம்மோனியாவினால் மண்ணின் தன்மையும் மாறுவதால் விவசாயம் மற்றும் கால்நடைகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.