100 மடங்கு அதிவேகமாக இயங்கும் வைபை

Last Modified : 01 Jan, 1970 05:30 am
தற்போது இருக்கும் வைபை நெட்ஒர்க்களை விட 100 மடங்கு அதிவேகமாக செயல்படும் வைபை நெட்ஒர்க்கை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Eindhoven University of Technology-ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பாதிப்பு ஏற்படுத்தாத அகச்சிவப்பு கதிர்கள் மூலம் செயல் படக் கூடிய வைபை அமைப்பை உருவாக்கி உள்ளனர். இந்த அமைப்பில், பொதுவான ஒரு மத்திய ஆண்டெனாவுக்கு ஆப்டிகல் பைபர் மூலமாக சிக்னல்களை அனுப்பி, ஆண்டெனாவின் மேற்புறத்தில் பொருத்தப் பட்டுள்ள ஒளித்தகடுகள் மூலம் அனைத்து திசைகளிலும் வெவ்வேறு அலைவரிசையில் வைபை சிக்னலை அனுப்ப முடியும். இதன் மூலம் அதிக பட்சமாக நொடிக்கு 40 ஜிகாபைட்ஸ் வேகத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். தற்போது உள்ள சிறந்த வைபை நெட்ஒர்க்குகள் நொடிக்கு 300 மெகாபைட் வேகத்தில் இயங்க கூடியவை. மேலும் இவ்வமைப்பில் ஒளி கற்றைகள் மூலம் சிக்னல் அனுப்பப் படுவதால் ஒரு ஆண்டெனாவில் இருந்து வரும் சிக்னலை பல பேர் பயன்படுத்தினாலும் அதன் வேகம் குறையாது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close