பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்க புது ஐடியா..!!!

  jerome   | Last Modified : 21 Mar, 2017 06:11 pm
எழில்மிகு இயற்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதில் பிளாஸ்டிக்கிற்கும் பங்கு உண்டு. பிளாஸ்டிக் பயன்பாட்டினை குறைப்பதற்கு மக்களிடையே தொடர் விழிப்புணர்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி போடப்படும் பிளாஸ்டிக் குப்பைகளால் மண்ணின் தன்மை மாறி விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஆஸ்திரேலியா சிட்னி நகரில் பிளாஸ்டிக் பொருட்களை ஒரே இடத்தில் சேகரித்து, மறுசுழற்சிக்கு அனுப்ப அந்நகர அரசு புது யுத்தியை கையாண்டு வருகின்றது. Reverse Vending Machines என்ற மெஷினை மக்கள் கூடும் இடங்களில் வைத்துள்ளனர். Vending Machines களை நம் ஊர் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பார்த்திருப்பீர்கள். அதில் காசுகளை போட்டால் போதும் டிக்கட்டுகள் கிடைக்கும். ஆனால் இதில் காசுக்கு பதிலாக பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை போட்டால் பஸ் டிக்கட் அல்லது உணவு கூப்பன்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு ஒரே இடத்தில் பிளாஸ்டிக்குகள் சேருவதால் அவைகளை மறுசுழற்சிக்கு அனுப்புவதும் எளிதாகின்றது. இது நடைமுறைக்கு வந்தபின் சிட்னியில் ஆண்டுதோறும் 58% பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றதாம். இந்தியாவிலும் Reverse Vending Machines கள் விற்பனைக்கு உள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close