இன்று உலக தண்ணீர் தினம்

  jerome   | Last Modified : 21 Mar, 2017 10:59 pm
நம் பூமி நான்கில் மூன்று பங்கு நீரால் சூழப்பட்டிருந்தாலும் குடிநீருக்கான தேவையில் இன்றளவும் நிறைவை அடையவில்லை என்பதே உண்மை. இன்று நிலவும் அரசியல் சண்டைகளால், தேர்தல் வாக்குறுதியில் இருந்த கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் எங்கு போனது என்றே தெரியவில்லை. இந்த ஆண்டு பருவ மழையும் ஏமாற்றிவிட்டதால் அணைகளில் நீர் வரத்து இல்லை என்பது ஒரு பக்கம். என்றோ பெய்யும் மழையினை சேமிக்க கொண்டு வரப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அரசு அலுவலகங்களிலேயே பின்பற்றாத அவல நிலை இன்னொரு பக்கம். இந்நிலையில் ஆண்டிற்கு ஒருநாள் மட்டும் உலக தண்ணீர் தினம். இந்த ஒருநாளில் என்ன மாறிவிடப் போகின்றது? வழக்கம்போல கருத்தரங்குகள், விழிப்புணர்வு ஊர்வலங்கள், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உலக தண்ணீர் தினம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டிகள். இந்த அளவில்தான் நம்முடைய பங்களிப்புகள் இருக்கின்றன. சரி மேட்டருக்கு வருவோம்... 1992-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டு, 1993-ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினம் கொண்டாடப் படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தீம் எடுத்துக்கொண்டு அதுகுறித்த நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் படி இந்த வருடத்திற்கு "2017 – Why Waste Water?" என்ற தீம் முடிவாகியுள்ளது. இதற்குமுன் "2016 – Better Water, Better Jobs, 2015 – Water and Sustainable Development, 2014 – Water and Energy " என்ற அடிப்படையில் செயல்பாடுகள் நடைபெற்றதாக ஐ.நா அறிவித்து உள்ளது. உலகெங்கும் 66,300 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனராம். இந்த மக்கள் எல்லாருமே வளரும் நாடுகளில் இருப்பவர்கள் தானாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close