ஜிகா , டெங்கு நோய்த்தொற்றை கண்டுபிடிக்கும் மொபைல் ஆப்

Last Modified : 22 Mar, 2017 10:56 am

அமெரிக்காவில் உள்ள Sandia National Labs-ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஜிகா, டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்களை கண்டுபிடிக்கும் மொபைல் ஆப் உதவியுடன் இயங்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். Quenching of unincorporated amplification signal reporters (QUASR) மற்றும் loop-mediated isothermal amplification (LAMP) முறையை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த ஆப் மூலம் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளில் உள்ள நோய் தொற்றை 30 நிமிடங்களில் கண்டறியலாம். இதில் மொபைல் போன்களில் உள்ள கேமரா சென்சார்கள் fluorimeter போல் செயல்பட்டு நோய் பாதிப்பை காட்டிக் கொடுத்து விடும். இம்முறையில் மொபைலை LAMP பாக்சின் மீது வைத்து ஆபை ஆன் செய்ய வேண்டும். ஆப், பாக்சில் உள்ள ஹீட்டரை இயக்கி பாக்சின் கீழ் வைக்கப்பட்டுள்ள ரத்த அல்லது சிறுநீர் மாதிரியின் மீது LAMP வினையை தூண்டும். QUASR - LAMP ஒளிக்கற்றைகள் ரத்த அல்லது சிறுநீர் மாதிரியின் மீது விழும் போது நோய் பாதிப்புள்ள செல்கள் ஒளிர ஆரம்பிக்கும். இதனை மொபைல் போனில் உள்ள கேமரா சென்சார்களின் உதவியுடன் பார்க்கலாம். ஒளிர் தன்மையை பொறுத்து நோய் தொற்றின் அளவு மற்றும் தேவையான சிகிச்சை முறை போன்றவற்றை கண்டறிந்து நோய் பாதிப்பு உள்ளவருக்கு சிகிச்சை அளிக்கலாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.