வியர்வை நாற்றத்தை விரட்ட 'குட்டி ஃபேன்கள்'

  jerome   | Last Modified : 22 Mar, 2017 11:34 am
வெயில் காலங்களில் உடலில் வழிந்தொழுகும் வியர்வையால் அதிக தொல்லைகளை அனுபவிக்க வேண்டிய நிலைமை இருக்கும். இது நம்மை மட்டும் பாதிக்காமல் வியர்வையால் வெளிவரும் நாற்றம் நம் அருகில் இருப்பவர்களையும் முகம் சுளிக்க வைக்கும். இதற்காக மணம் கமழும் வாசனை திரவியங்களை பயன்படுத்தினாலும், நாற்றத்தினை குறைக்க முடியுமே ஒழிய, வியர்வை வராமல் தடுக்க முடியாது. இதிலிருந்து தற்காலிகமாக விடுபட ஜப்பான் விஞ்ஞானிகள் (Armpit Fans) 'குட்டி கூலர் ஃபேன்' களை உருவாக்கி உள்ளனர். கையடக்க அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இதை நம் சட்டையின் கை பகுதியில் மாட்டிக்கொண்டால், இதிலிருந்து வெளிவரும் குளிர்ந்த காற்று நம் அக்குள் பகுதியை வியர்க்காமல் பார்த்துக்கொள்ளும். ரூ.2500 க்கு விற்கப்படும் இந்த ஃபேன்கள் ஒருமுறை சார்ஜ் போட்டால் 8-9 மணி நேரம் வரை இயங்கக்கூடியது. வேண்டுமானால் தனியான பேட்டரிகள் மூலமும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close