இது போன் மாதிரி... ஆனா, போன் இல்ல..!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகெங்கும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மக்களில் 70% பேர், காலையில் தாங்கள் விழித்த ஒரு மணி நேரத்திற்குள் தங்களின் போன்களை பயன்படுத்த தொடங்கி விடுவதாக, ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த உளவியல் பேராசிரியர் லிசா மெர்லோ தன்னுடைய சர்வேயின் மூலம் கண்டறிந்து உள்ளார். மொபைல் போனிற்கு மக்கள் அடிமையாகி வருவதாகவும், அதனால் மனரீதியான பிரச்சனைகள் எழுவதாகவும் கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க, இவ்வாறு மொபைல் போனிற்கு அடிமையானவர்களை மீட்க புதிதாக 'No Phone' உருவாக்கப்பட்டு உள்ளது. ஸ்மார்ட்போன் மாதிரியே இருக்கும் இதில் எதுவுமே கிடையாது. கைகளில் மொபைல் போனை வைத்துக்கொண்டே சுற்றியவர்கள், திடீரென்று அது இல்லாமல் போகும்போது வெறுமையை உணராமல் இருக்கதான் இந்த No Phone. செல்ஃபிக்கு அடிமையானவர்களின் மன திருப்திக்காக இதில் ஒரே ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டும் இருக்கின்றது. இந்திய ரூபாயின் மதிப்பில் இதன் விலை ரூ.750. சிம்ப்பிளா சொல்லணும்னா குழந்தைகளுக்கு பால் குடி மறக்க வாய்ல ரப்பர் நிப்பிள் வைக்கிற மாதிரிதான் இந்த No Phone.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close