பிரிட்டிஷ் கப்பலால் அழிக்கப்பட்ட இந்தோனேசிய பவளப்பாறைகள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அடிக்கடி பூகம்பம் மற்றும் சுனாமி அலைகளை உண்டாக்கும் இந்தோனேசிய கடற்பகுதியில் சுமார் 19 ஆயிரம் சதுர மீட்டருக்கு பவளப்பாறைகள் நிறைந்து காணப்பட்டன. பவளப்பாறைகளின் உதவியால் அந்தப் பகுதியில் மீன் வளமும் அதிகமாக இருந்தது. ஆனால், கடந்த மார்ச் 4 ஆம் தேதி அந்த கடற்பரப்பின் வழியே, பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி கலோடினியன் என்ற 4200 டன் எடையுள்ள சரக்கு கப்பல் கடந்து சென்றது. இதனால், சுமார் 13,300 ச.மீ அளவில் பவளப்பாறைகள் முற்றிலும் அழிந்துவிட்டது. மேலும் இதர பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தோனேசிய மக்கள் அந்த கப்பலின் கேப்டன் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர். இந்தோனேசிய வெளியுறவுத்துறை அமைச்சகமும் அக்கப்பல் நிறுவனத்திற்கு விளக்கம் மற்றும் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close