விண்வெளியில் வாக்கிங்கில் நாசா ஆராய்ச்சியாளர்கள்

  jerome   | Last Modified : 24 Mar, 2017 09:43 pm
பூமியின் சுற்றுவட்ட பாதையில் நாசா நிறுவியுள்ள விண்வெளி ஆய்வுகூடத்தின் மின்சார பழுது வேலைகள் இன்று நடந்து முடிந்துள்ளது. இந்த பராமரிப்பு வேலைகளின் போது விண்வெளி ஆய்வு கூடத்தினுள் உள்ள வீரர்கள் கூடத்தை விட்டு வெளிவந்து விண்வெளியில் மிதந்து கொண்டிருப்பர். இதை Space Walk என்று அழைப்பர். இந்த ஆண்டின் இரண்டாவது Space Walk இன்று நடந்து முடிந்துள்ளது. இதை நாசா விஞ்ஞானிகள் நேரடி ஒளிபரப்பும் செய்துள்ளனர். இப்போதுள்ள விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பேட்டரிகளை மாற்றுவதற்காக இது நடந்துள்ளது. இதுவரை 197 Space Walk நடந்து முடிந்துள்ளதாம். மொத்தம் 51 மணி 6 நிமிடம் 4 வினாடி நேரங்கள் விண்வெளி வீரர்கள் விண்ணில் மிதந்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close