இரு நட்சத்திரங்கள் மோதிக்கொள்ளும் அரிய நிகழ்வு

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

2022 -ல் நமது கண்களுக்குத் தெரியும் விதத்தில் வானில் பெரு வெளிச்சத்துடன் சூப்பர்நோவா வெடிப்பு தெரியவுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பல வருடங்களாக பைனரி நட்சத்திர அமைப்பு (Binary Star System) என்ற ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளே இந்த சூப்பர் நோவா வெடிப்பை பற்றிக் கூறி உள்ளனர். மேலும் இந்த சூப்பர் நோவா 1 வருடமாவது நீடிக்கும் என்றும் இரவு வானில் மிக வெளிச்சமான புதிய நட்சத்திரமாக அது தோன்றும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. மிகப்பெரிய இரு நட்சத்திரங்கள் தமது ஆயுள் காலம் முடியும் தருவாயில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் போது ஏற்படும் பெரு வெடிப்பும் அதனால் ஏற்படும் அதிகமான வெளிச்சமுமே சூப்பர் நோவா (Super Nova) எனப்படுகின்றது. இது போன்ற வெடிப்புக்கள் நமது பூமியில் இருந்து 1 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் ஏற்படுகையில் நம்மால் பார்க்க முடியும். எனினும் இவை எப்போது ஏற்படும் எனக் கணிப்பது தான் கடினமானது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது சூப்பர் நோவாவைக் கணிப்பது மில்லியனில் ஒரு பங்கே சாத்தியம் என அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், முதன் முறையாகக் கணிக்கப் பட்டுள்ள இந்த சூப்பர் நோவா, 2022 ஆம் ஆண்டு பூமியின் வடக்கே உள்ள அன்னப் பறவை போன்ற வடிவம் கொண்ட நட்சத்திரத் தொகுதியான Cygnus ற்கு இடையே புதிய நட்சத்திரமாகத் தோன்றும் என்று சொல்லப்படுகின்றது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close