• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

கண்களை திறந்து கொண்டே தூங்குவது சாத்தியமா..???

  jerome   | Last Modified : 25 Mar, 2017 05:16 pm

"நெக்டெர்னல் லெகோப்தால்மஸ்" என்று மருத்துவத்துறையில் சொல்லப்படும் கண்களை திறந்து கொண்டே தூங்குவது குழந்தைகளில் பலருக்கும் இருக்கும். குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை தூங்கும் போது இமைகளை முழுமையாக மூடாமல் கொஞ்சம் திறந்த படி தூங்குவது இயல்பு. மேல் இமை தசைகள் சரியான வளர்ச்சி அடைந்த பின்னர் இமைகளை முழுவதுமாக மூடி தூங்குவர். சிலருக்கு டீன் ஏஜ் வரைக்குமே இந்த பிரச்சனை இருக்கலாம். பெரியவர்களுக்கு இந்த நிலை வரும் போது அது தோல் நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக கருதப் படுகின்றது. பெரியவர்களுக்கு இந்த பிரச்சனையால் இமைமுடிகள் கண்களில் பட்டு எரிச்சலை ஏற்படுத்தும். இந்நிலை தொடர்ந்தால் பார்வை பிரச்சினை ஏற்படும். அப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஐ மாஸ்க் என்று சொல்லக்கூடிய முக மூடியை அணிந்து கொள்ள பரிந்துரை செய்கிறார்கள். பெரும்பான்மையான விலங்குகள் மற்றும் பறவைகள் ஒரு கண்ணை மட்டும் மூடி தூங்கு கின்றன. அப்போது அவைகளுக்கு ஒரு பக்க மூளையும் விழிப்புடன் இருக்கும். இது எதிரிகளிடம் இருந்து தம்மை தற்காத்து கொள்ள இயற்கை வழங்கிய கொடை. மீன்களுக்கு இமைகளே இல்லை. டால்பின்கள் ஒரு கண்னை மூடியே தூங்கும். கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகளும் தூங்கிக் கொண்டே தான் பறக்கின்றன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close