தெலுங்கானா: உலகின் மிகப்பெரிய நுழைவாயிற்கல் கண்டெடுப்பு

  jerome   | Last Modified : 27 Mar, 2017 03:09 pm

40 டன் எடையுள்ள உலகின் மிகப்பெரிய நுழைவாயில் கல் ஒன்று தெலுங்கானாவில் உள்ள நர்மேதா கிராமத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளது. தெலுங்கானா தொல்லியல் துறையினர் நர்மேதா கிராமத்தின் பண்டைய காலத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் இந்தக் கல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அம்மாநில தொல்லியல் துறை இணை இயக்குனர் ராமுலு நாயக், "அதிக எடை கொண்ட இந்தக் கல் தான் இதுவரை உலகளவில் கண்டெடுக்கப்பட்டு உள்ள மிகப்பெரிய நுழைவாயிற்கல். இதை கிரேன் உதவியுடன் தான் எடுக்க முடிந்தது. இதனை அடுத்தடுத்த ஆய்வுகளுக்கு உட்படுத்துவதன் மூலம், இதன் காலகட்டம் என்ன என்பது பற்றியும், தொடர்ச்சியான அகழ்வாராய்ச்சியால் இப்பகுதியில் வாழ்ந்த வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களின் வாழ்க்கை முறையை பற்றியும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close