சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடலுக்கடியில் 2000-6500 அடி ஆழத்தில் வாழ்ந்த பேய் சுறாக்கள் என அழைக்கப்படும் 'கைமேரா சுறா' க்களின் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. 2009 ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவை சேர்ந்த Monterey Bay Aquarium Research Institute (MBARI) அமைப்பினரால் ஹவாய் தீவு கடற்பகுதியில் முதன்முறையாக கைமேராவின் படிமங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.
அதன்பிறகு நடந்த தொடர் தேடுதலால் பசிபிக் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் இன்னும் சில படிமங்கள் கைப்பற்றப்பட்டன. 4 அடி நீளமுள்ள இந்த கைமேராக்கள் சாம்பல் மற்றும் வெளிர்நீலம் நிறமுடையவை என்றும் ஆண் கைமேராக்களுக்கு பாலுறுப்பு அதன் நெற்றிப்பகுதியில் அமைந்து இருப்பதாகவும் டி.என்.ஏ ஆய்வில் தெரிய வந்துள்ளது.