மனிதர்களின் உடல் தானாக தீப்பற்றி கொள்வது சாத்தியமா..???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

Spontaneous Human Combustion என்று சொல்லப்படக்கூடிய மனிதர்களின் உடலில் தானாக தீப்பற்றிக்கொள்ளும் வினோத சம்பவத்திற்கு இன்றளவும் விடை கண்டறிய இயலவில்லை. கடந்த 300 ஆண்டுகளில் உலகின் பல பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 200 பேரின் உடல் தானாக தீப்பற்றி எரிந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 2013-ல் கூட தமிழ்நாட்டில் விழுப்புரத்தைச் சேர்ந்த 6 மாத குழந்தைக்கு இந்நிலை ஏற்பட்டு உடல் முழுதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் யாராலும் மறக்க முடியாத ஒன்று. இந்த வினோத நிகழ்விற்கு காரணம் "இதுதான்" என்று அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும், பிரிட்டனைச் சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளர் பிரைய்ன் ஜே. ஃபோர்ட் சில காரணங்களை முன் வைத்துள்ளார். அதன்படி, நம் உடலில் அசிட்டோன் என்ற வேதிப்பொருள் சுரக்கின்றது எனவும் இதன் அளவு அதிகரிக்கும் போது நம் உடலின் உஷ்ணத்தை பொறுத்து தீப்பற்றிக்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறி உள்ளார். இந்த அசிட்டோன் நம் உடலில் சுரக்கும்போது நம் சுவாசத்தில் நெய்ல் பாலிஷ் ரிமூவரில் வரும் வாசனையை உணர முடியுமாம். மேலும் ஆல்கஹால் அருந்துவது, அதிகப்படியான கொழுப்பு சேருதல் போன்றவை அசிடோனின் அளவை அதிகரிக்கின்றதாம். ஃபோர்ட் தவிர பிற ஆராய்ச்சியாளர்கள், இதுவரை தானாக தீப்பற்றி இறந்தவர்களின் உடலையும், சம்பவம் நடந்த இடத்தையும் ஆராய்ந்ததில் அவர்களுக்கு அருகே தீப்பற்றிக்கொள்ள கூடிய பொருட்கள் இருந்ததாகவும், நடந்த அனைத்து சம்பவங்களும் அவர்கள் தனியாக இருக்கும்போதே நடந்துள்ளது, பொது இடங்களில் ஏன் நடக்கவில்லை எனவும் விவாதித்து வருகின்றனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.