ஜிம்னாஸ்டிக் சாகசம் செய்யும் சிலந்தி பூச்சி

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கடந்த 2015 நவம்பர் மாதம் வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி உலகெங்கும் 113 குடும்பத்தை சேர்ந்த 45,700 வகை சிலந்திப்பூச்சிகள் இருப்பதாக பூச்சியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக எல்லா சிலந்திகளும் தன் எச்சியின் மூலம் வலை போன்ற அமைப்பை உருவாக்கி, அதில் மற்ற பூச்சிகளை வேட்டையாடி உண்பவையே. ஆனால், தென் ஆப்பிரிக்காவின் நமீபிய பாலைவனத்தில் வாழும் 'தங்க சக்கர சிலந்தி' என அழைக்கப்படும் Carparachne aureoflava என்ற அறிவியல் பெயரை கொண்ட சிலந்தி, வலை அமைப்பினை உருவாக்குவது இல்லையாம். தனக்கான இரையை மண்ணுக்குள் புதைந்து வேட்டையாடும் திறன் உடையதாம். அது மட்டுமின்றி, தனக்கு ஒரு ஆபத்து வந்துவிட்டால் தன் உடலை சக்கரமாக மாற்றி மணிக்கு 350 கி.மீ வேகத்தில் மண் சரிவுகளில் உருண்டு ஓடக்கூடிய சாகசத் திறமையும் இதற்கு உள்ளதாம். இவைகளுக்கு கால் முளைப்பதற்கு முன், புழுவாக இருக்கும் போதே தன் உடலை சக்கரமாக மாற்றி தரையிலிருந்து 1 அடி உயரம் வரை தாவி செல்லக் கூடிய திறனும் உண்டாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.