இன்டர்நெட் இல்லாமல் இனி அன்றாட வாழ்க்கையே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், இன்டர்நெட்டினை உபயோகம் செய்ய பயன்படும் மொபைல், லேப்டாப் போன்ற பொருட்களுக்கு போதுமான மின்சார வசதி இருக்க வேண்டுமே. அதிலும் குறிப்பாக வைஃபை, ப்ளூ டூத் போன்றவற்றின் மூலம் டிவைஸ்களை இணைக்கும் போது சார்ஜ் வெகு சீக்கிரத்தில் குறைந்து விடும்.
இதனை சரி செய்ய வைஃபையில் இருந்தே சார்ஜ் ஏற்றிக்கொள்ள புது தொழில்நுட்பத்தை வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் கண்டறிந்து உள்ளனர். RF Powered Device என்ற ஒன்றை வைத்து வெளிவரும் எஞ்சிய வைஃபை சிக்னல்களை, வைஃபை இணைக்கப்பட்டு உள்ள சாதனங்களுக்கு பவர் சிக்னல்களாக மாற்றித் தருமாறு வடிவமைத்து உள்ளனர். Wi-Fi back scatter என்று அழைக்கப்படும் இந்த முறையின் மூலம் குறைந்தது 10 மைக்ரோ வாட்ஸ் பவரைப் பெற முடியுமாம்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.