இந்தோ-சைனீஷ் புலிகளை பாதுகாக்கும் தாய்லாந்து காடுகள்

  jerome   | Last Modified : 29 Mar, 2017 12:14 pm
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் உலகளவில் இருந்த புலிகளின் எண்ணிக்கை சுமார் 1 லட்சம் என்றும், ஆனால் 2016-ல் எடுக்கப்பட்ட சர்வேயின் படி தற்போது வெறும் 3,890 புலிகளே உள்ளன என்றும் விலங்கியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் கிழக்கு தாய்லாந்து காடுகளில் அந்நாட்டு வனத்துறையினர் இந்தோ-சைனீஷ் புலி இனத்தைச் சேர்ந்த குட்டிகளை பார்த்துள்ளனர். புலிகள் இனப்பெருக்கம் செய்யவும், தங்களுக்கான வாழ்வாதாரங்களை உறுதி படுத்திக் கொள்ளவும் கிழக்கு தாய்லாந்தின் வனப்பகுதி ஏற்றதாக உள்ளதென அந்நாட்டு வன உயிர் பாதுகாப்பு அதிகாரிகளும், புலிகள் பாதுகாப்பு குறித்து செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தெரிவித்து உள்ளன. இதுபோக, மேற்கு தாய்லாந்தின் ஹூயாய் கா கியாங் வன உயிர் சரணாலயத்திலும் இந்தோ-சைனீஷ் புலிகள் காணப்படுகின்றதாம். அழிந்து வரும் இனமான இந்தோ-சைனீஷ் புலிகளின் எண்ணிக்கை உலகளவில் வெறும் 371 மட்டுமே. வங்கப் புலி, சைபீரியன் புலி இவைகளோடு ஒப்பிடும் போது இந்தோ-சைனீஷ் புலிகளின் உருவ அமைப்பு சிறியது தான். புலியை தேசிய விலங்காக கொண்டிருக்கும் நம் இந்தியாவில் 2,226 புலிகள் உள்ளன என்றும், உலகளவில் அதிக புலிகள் இருப்பதும் இங்கு தான் என்றும் இந்திய வன உயிர் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close