அடுத்த 80 ஆண்டுகளில் அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா கடற்கரைப் பகுதிகளில் 34% - 67% அளவிற்கு மண் அரிப்புகளும், 3.3 - 6.5 அடிகள் வரை கடல் நீர் மட்டம் உயரவும் வாய்ப்புகள் உள்ளதாம். இத்தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வாளரும், சிக்காக்கோ இல்லினியோஸ் பல்கலைக்கழக கட்டிடவியல் பேராசிரியருமான விட்டோசெக் தனது ஆய்வின் மூலம் தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில் நடத்தப்பட்ட நவீன கணினி முறை ஆய்வில், கடல் மண்ணின் இடமாற்றம் குறித்து ஆராயப்பட்டது. இதில், கடல் மண்ணானது அலைகளுக்கு ஏற்ப இணையாகவும், செங்குத்தாகவும் இடம்பெயர்வதாகவும், கடலின் வெப்பநிலை அதிகரிப்பால் உருவாகும் எல்-நினோ விளைவினால், மண்ணின் இடம்பெயர்வு அதிகரிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால், கடல் அரிப்பு கூடிக்கொண்டே செல்வதால் கடற்கரையின் அளவு குறையும் என்று விட்டொசெக் கூறி உள்ளார்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.