ஆன்லைன் சாட்டில் நிஜ முத்தம்!!

  jerome   | Last Modified : 30 Mar, 2017 04:09 pm
சிங்கப்பூரைச் சேர்ந்த 'லோவோடிக்ஸ்' என்ற ரோபோடிக் பொம்மைகள் தயாரிப்பு நிறுவனம் 'KISSENGER' என்ற புது தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் ஆன்லைனில் வீடியோ கால் பேசும்போதே எதிர்முனையில் நம்மோடு பேசி கொண்டிருப்பவர்களுக்கு முத்தங்களும் கொடுக்க முடியும். இந்த நவீன சாதனத்தில் சிலிக்கான் உதவியால் உதடுகள் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் நாம் முத்தமிடும் போது, இதிலுள்ள சென்சிட்டிவ் ரெசிஸ்டர்கள், புரோசஸர்கள், வயர்லெஸ் டிரான்சிவர்கள் போன்றவை இயங்கி தகவல் பரிமாற்றம் போல் எதிர்முனையில் உள்ளவரின் கிஸ்ஸெஞ்சர் சாதனத்தின் உதடு அமைப்புகளை இயங்க வைக்கின்றன. இந்த கிஸ்ஸெஞ்சர் நுட்பத்திற்கான ஐடியா 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தினரால் முன் வைக்கப்பட்டது. அதன்பின், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, ஸ்பெயின், தைவான், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்பம் மற்றும் ஆய்வாளர்களைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. "KISSENGER" யை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ள வீடியோவை பார்க்கவும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close