ஒரு நொடியை பில்லியனாய் பிரித்தாலும் கணக்கிட முடியும் - நாசா

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அமெரிக்காவின் கிரீன் பெல்ட் என்ற இடத்தில் உள்ள கோடார்ட் ஸ்பேஸ் ஃபிளைட் சென்டரில் இயங்கி வரும் நாசாவினால் ICESat-2 என்ற செயற்கை கோள் ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. 2018 - ல் விண்ணில் ஏவப்பட உள்ள இந்த செயற்கை கோள் மூலம் பனிப்பாறை உருகுதல், மேகங்கள் மற்றும் நிலத்தின் தன்மை குறித்து ஆராயப்பட உள்ளது. இந்த செயற்கை கோளுக்காக Advanced Topographic Laser Altimeter System (ATLAS) என்ற புது தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், லேசர் ஒளி கற்றைகளின் பயண வேகத்தை அடிப்படையாக வைத்து ஒரு ஸ்டாப் வாட்ச் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்டாப் வாட்ச்சின் மூலம் ஒரு வினாடியை பில்லியனாக வகுத்தால் கிடைக்கும் எண் அளவைக்கூட கணக்கிட முடியும். லேசர் ஒளிக்கற்றைகளில் உள்ள போட்டான்களின் பயண வேகம் மற்றும் எதிரொளிக்கும் அளவை வைத்து பூமிக்கும் செயற்கை கோளிற்கும் உள்ள தூரத்தை துல்லியமாக கணக்கிட முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் பொருட்களின் தூரத்தையும் கண்டறிய முடியுமாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close