நாளை பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம் - ஆபத்து உண்டா..???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
41P/Tuttle-Giacobini-Kresák என்று பெயரிடப்பட்டுள்ள வால் நட்சத்திரம், நாளை (ஏப்ரல் 1) இரவு பூமியை நிச்சயமாக கடந்து செல்லும் என்றும், இதனால் பூமிக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். பூமியிலிருந்து சுமார் 21243340.8 கி.மீ தொலைவில் இது கடந்து செல்ல உள்ளதாம். இந்த தொலைவானது பூமிக்கும், நிலவிற்கும் இடையே உள்ள தொலைவைப் போல 50 மடங்காகும். 41P/Tuttle-Giacobini-Kresák இந்த வால்நட்சத்திரம் இருப்பது 1858, 1907, 1951 ஆகிய வருடங்களில் தனித்தனியாக கண்டறியப்பட்டு இறுதியில், மூன்றுமே இந்த ஒரு வால் நட்சத்திரம் தான் என்ற முடிவுக்கு வரப்பட்டது. இந்த வால் நட்சத்திரத்தை நாளை இரவு வடமேற்கு பசிபிக் பகுதியில் இருந்து தெளிவாக பார்க்க முடியுமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close