பெரிய மிருகங்களை மலைப்பாம்பு உணவாக உட்கொள்வது எப்படி..??

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
விஷத்தன்மை இல்லாத பாம்பினங்களில் மலைப்பாம்பும் ஒன்று. பாம்புகளிலேயே அளவில் மிகப் பெரியதாக இருக்கும் பாம்பும் இது தான். இவை தங்களின் இரையாக பெரிய, பெரிய மிருகங்களையும், மனிதர்களையும் உண்ணக்கூடியவை. கடந்த வாரம் இந்தோனேசிய சுலவேசி தீவில் 25 வயதை உடைய ஒரு இளைஞரின் உடலை, 23 அடி நீள மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து எடுத்தனர். இதேபோல், 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் ஆலிவ் வகை மலைப்பாம்பு ஒன்று முதலையை உணவாக உட்கொண்டது கண்டறியப்பட்டது. இதைப்போன்று மிகப்பெரிய விலங்குகளை மலைப்பாம்புகள் இரையாக எடுத்துக்கொள்வது அரிதான நிகழ்வே என்று வன உயிரியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மலைப்பாம்பின் தொண்டைப் பகுதியில் தசைகள், தசை எலும்புகள், தசை நார்கள் போன்றவை விரிவடையும் வண்ணம் அமைந்து உள்ளதால் இரையின் அளவிற்கேற்ப அதன் வாய்ப்பகுதியும் விரிவடையுமாம். மேலும் இதன் தாடை எலும்புகள் விலகி, இணையும் அமைப்பில் இருக்கின்றதாம். அதிக எடையுள்ள இரையை பிடித்து அதன் உடல் பகுதியை தன் பலம் கொண்டு இறுக்கி விடுகின்றதாம். இரையின் இதயத்துடிப்பை உணரும் திறன் பெற்றுள்ள இவை, இரையான உயிர்களின் இறப்பை உறுதிசெய்த பின்னரே உட்கொள்ள துவங்குகின்றதாம். வயிற்றுக்குள் சென்ற இரை செரிப்பதற்கு ஏற்ப நொதிக்கும் என்ஸைம்கள் சுரக்க ஆரம்பித்து, முழுவதுமாய் செரிமானம் ஆகும் வரை சுரந்து கொண்டே இருக்குமாம். இரைகள் செரித்து கழிவாகும் வரை மலைப்பாம்புகள் ஒரே இடத்தில் அசையாமல் தான் இருக்குமாம். சில சமயங்களில் பல வாரங்கள் கூட செரித்தல் வேலை நடக்குமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close