சமீபகாலமாக, வடதுருவத்தில் உள்ள ஆர்க்டிக் கடல்களில், வெள்ளைவெளேர் என இருக்க வேண்டிய ஐஸ் படலங்கள் பச்சை நிறமாக மாறி வருகின்றன. இதற்கு, Phytoplankton என்னும் மிதவை உயிரினங்களின் வளர்ச்சியே காரணம் என அறிந்து அதிர்ந்துபோய் உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். காரணம், வடதுருவத்தில் சூரிய ஒளியினை ஐஸ் கட்டிகள் பிரதிபலித்து விண்ணுத் திருப்பி அனுப்பி, அங்கு தாவரங்களே வளராமல் பார்த்துக் கொண்டன. இதுதான் இயற்கையின் சமநிலையும் கூட.
ஆனால், இப்போது மனிதர்களின் செயலால் அதிகமான கரிக் காற்றால், பனிக் கட்டிகள் எதிபார்த்ததை விட மிக வேகமாக உருகி, அடியில் உள்ள பைடோபிளங்க்டன்கள் தெரிகின்றன.
புவி வெப்பமயமாதலால் ஆர்க்டிக் பகுதியின் உயிரியல் நிலையே மாறி வருகிறது என ஹார்வர்ட் விஞ்ஞானிகளின் ஒரு ஆய்வு உறுதிபடுத்துகிறது.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.