கடலில் எவ்ளோ பிளாஸ்டிக் இருக்கு தெரியுமா??

  jerome   | Last Modified : 03 Apr, 2017 04:19 pm
உலகம் முழுவதும் உள்ள கடற்பரப்பில் சுமார் 2,70,000 டன் அளவிற்கு பிளாஸ்டிக் குப்பைகள் மிதந்து வருவதாகவும், இதன் எடை அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட 10 மடங்கு அதிகம் என்றும் ஐரோப்பாவின் டாமாரோ கலோவே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும், 50% பிளாஸ்டிக் குப்பைகள் நாம் ஒருமுறை பயன்படுத்தி குப்பையிலிட்ட பிளாஸ்டிக் என்றும், இதில் 10% அளவு கடலில் குப்பையாக கலக்கின்றது என்றும் கூறுகின்றனர். பிளாஸ்டிக்கில் உள்ள பாலி எத்திலீன், பாலி புரொப்பிலீன், பாலிஸ்டைரின் மற்றும் பிவிசி போன்ற வேதி பொருட்கள் கடல் நீருடன் சேர்ந்து விஷத்தன்மை உடையதாக மாறுகின்றதாம். இவைகளை இரை என நினைத்து கடல் வாழ் உயிரினங்கள் சாப்பிடுவதால் அதிக இறப்புகள் நேர்வதாக கவலை தெரிவித்து உள்ளனர். சீனா மற்றும் பூமியின் தென் துருவப் பகுதியை ஒட்டியுள்ள நாடுகளில் இருந்து தான் அதிகப்படியான பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலப்பதாகவும் தங்கள் ஆய்வின் முடிவில் கண்டறிந்து உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close