உப்பு நீரை நன்னீராக மாற்றும் கிராஃபைன் மூலக்கூறுகள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகெங்கும் குடிநீரின் தேவை அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில், நிலத்தடி நீரின் அளவோ குறைந்து கொண்டே இருக்கின்றது. ஆகவே, கடல் நீரிலிருந்து உப்பினை பிரித்து நன்னீராக மாற்றுவதற்கு நடந்து வரும் ஆய்வில் மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மைல் கல்லை எட்டியுள்ளனர். கிராஃபைன் ஆக்ஸைட் மூலக்கூறுகள் மூலம் நானோ துகள்கள், உப்புக்கள் மற்றும் ஆர்கானிக் மூலக்கூறுகள் போன்றவற்றை வடிகட்டி பிரிக்க முடியும் என்பதை கண்டறிந்து உள்ளனர். இதனை பயன்படுத்தி உப்பு நீரினை வடிகட்டியதில் 97% அளவிற்கு சோடியம் குளோரைடு பிரித்து எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வினை மேலும் விரிவு படுத்தி நடைமுறைக்கு கொண்டு வரும் பட்சத்தில் உலகெங்கும் குடிநீருக்காக தவித்து வரும் 600 மில்லியன் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close