குழந்தைகளின் மூளையை பாதிக்கும் வாகனப் புகை

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையில் கலந்திருக்கும் நைட்ரஜன் ஆக்ஸைடினை சுவாசிப்பதனால் குழந்தைகளின் மூளை செல்கள் பாதிக்கப்பட்டு ஆட்டிசம் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகள் வருவதாக லண்டன் சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து லண்டன் கிங்ஸ் கல்லூரி நச்சுயியல் துறை ஆராய்ச்சியாளர் டாக்டர் அயான் மட்வே கூறுகையில், "வாகனப்புகையில் இருக்கும் மாசின் பெரிய துகள்கள் மூக்குவழியாக உள்வாங்கப்படும். அவற்றில் சிறியவை நுரையீரல் மூலம் ரத்தத்துக்குள் நுழையும். அதனிலும் சிறியவை, மூக்கை மூளையுடன் இணைக்கும் நரம்புகள் மூலம் மூளைக்குள் செல்கின்றன" என்று தெரிவித்து உள்ளார். கர்ப்பிணி பெண்கள் இதனால் பாதிக்கப்படும் போது, கருவில் இருக்கும் குழந்தையும் சேர்ந்து பாதிக்கப் படுகிறதாம். சமீபத்தில் நடந்த ஆய்வில் 529 குழந்தைகளில் 279 பேருக்கு ஆட்டிசம் பாதிப்பு இருந்ததாக அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் கூறி உள்ளது. பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை விட டீசல் பயன்படுத்தப்படும் வாகனங்களால் தான் அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close