படுத்து கிடந்தே 11 லட்சம் சம்பாதிக்கலாம்!!

  jerome   | Last Modified : 06 Apr, 2017 08:30 pm
பிரான்ஸினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் விண்வெளி மருத்துவம் மற்றும் உடலியல் ஆய்வு நிலையத்தில் புதிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வில் விண்வெளியில் நிகழும் மைக்ரோ கிராவிட்டி, எடை வேறுபாடு குறித்து ஆராய்வதற்கு திட்டமிடப்பட்டு இருக்கின்றது. அதற்காக 20-45 வயதிற்குள் புகைப்பழக்கம் இல்லாத பிஎம்ஐ அளவு 22-27 ற்கு இருக்கக்கூடிய 24 ஆண்கள் தேவைப்படுகின்றனர். 60 நாட்கள் தொடர்ந்து படுத்திருக்க வேண்டும். உணவு மற்றும் இதர விஷயங்கள் எல்லாம் படுத்த நிலையில் இருந்தே செய்து கொள்ள வேண்டுமாம். இந்த சோதனைக்கு உட்படுத்தும் முன்னும் பின்னும் அனைவருக்கும் தீவிர மருத்துவ சிகிச்சை செய்யப்படும் என்றும், இதற்கு சம்பளமாக ரூ.11 லட்சம் வழங்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close