வேட்டையாடும் வினோத நத்தைகள்

  jerome   | Last Modified : 07 Apr, 2017 12:15 am

உலகிலேயே மிகப்பெரிய செயற்கை பவளப் பாறைகளை உடைய அமெரிக்காவின் ஃபுளோரிடா கடற்கரைப் பகுதியில் புதிய உயிரினமான புழு வடிவ நத்தைகள் (worm-snails) கண்டுபிடிக்கப் பட்டு உள்ளன. இப்பகுதியில் கடலுக்கு அடியில் இருந்த உடைந்த கப்பலின் பாகங்களில் இந்த நத்தைகள், சிலந்திகள் போல வலை அமைத்து வாழ்ந்து வருவதை ஃபுளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம் மற்றும் கேப் ப்ரெட்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இவை மற்ற நத்தைகளை போல் இல்லமால், பார்ப்பதற்கு புழுவின் வடிவில் இருப்பதாகவும் சிலந்திகள் போலவே இரையை வேட்டையாடி உண்பதாகவும் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். பருவநிலை மாற்றத்தால் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் பவளப் பாறைகள் அழிந்து வரும் நிலையில் இந்த புதிய உயிரினத்தின் வருகை கடல் சார் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close